ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

கூரத்தாழ்வான் அனுபவித்த கண்ணன் – 2

சுந்தரபாஹுஸ்தவத்தில் கூரத்தாழ்வான் எம்பெருமானின் மத்ஸ்யாவதாரம் தொடங்கி கல்கி அவதாரம் வரை முப்பது ஸ்லோகங்களில் அனுபவிக்கிறார். நூற்றியேழாம் ஸ்லோகத்திலிருந்து நூற்றிபதினாறாம் ஸ்லோகம் வரை கிருஷ்ணாவதாரத்தின் குணசேஷ்டிதங்களை அநுபவிக்கிறார். இவற்றை சற்று விரிவாக பார்ப்போம்:

[107: ஹே ஸுந்தரைகதரஜந்மநி க்ருஷ்ணபாவே]
கண்ணனுக்கு தேவகி, யசோதா என்று தாயிருவர்; வஸுதேவ, நந்தகோபர் என்று தந்தையர் இருவர்; யதுகுல, கோபாலகுலங்கள் என்று குலங்கள் இரண்டு; ஆக இப்படி இரண்டிரண்டாகஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய்என்னும்படியான எம்பெருமான் நிகழ்த்திய லீலைக்கு என்ன உத்தேச்யம் இருக்கும் என்று வினவி, கூரத்தாழ்வான் கோபால குலத்திற்கு தகுதியாக நப்பின்னை பிராட்டியையும், க்ஷத்ரிய குலத்திற்கு தகுதியாக ருக்மிணி பிராட்டியையும் பெறுவதே உத்தேச்யம் என்று இந்த ஸ்லோகம் மூலம் சாதிக்கிறார்.

[108: த்வம் ஹி ஸுந்தர! யதா ஸ்தநந்தய:]
இந்த ஸ்லோகத்தில் பூதனையின் முலைப்பாலை அமுதாய் உண்டருளினதை சாதிக்கிறார். அவ்வரக்கி ஊட்டிய விஷம் பிறர்வாயில் புகுந்தால் அவர்களை முடித்துவிடுமே; அதை ஒருவராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாதே; அது உமக்கு ஜீரணமானது மட்டுமல்லாமல் அவள் உயிரையும் முடித்து நின்றதே! என்று சிசு பிராயத்திலும் எம்பெருமானின் பரத்வம் மேலோங்கி நின்றதை கண்டு பெருமிதம் கொள்கிறார்.

[111: காளியஸ்ய பணதாம் சிரஸ் து மே]
ஒரு கடம்ப மரத்திலிருந்து காளிங்கன் என்கின்ற நாகத்தின் படங்களின் மேல் குதித்து கண்ணன் நர்த்தனம் புரிந்த இதிஹாசத்தை ஆழ்வார்கள்பல்லவந்திகழ்பூங்கடஎன்று தொடங்கி அனுபவித்ததை அநுஸந்தானம் செய்து, அக்காளிங்கனின் மத்தாகவோ கடம்ப மரத்தின் உச்சியாகவோ ஆகப்பெற வேண்டும் என்று அவர் திருமுடி விரும்புகிறது என்று இந்த ஸ்லோகத்தில் அருளிச்செய்கிறார்.

அடுத்த இடிகையில் பராசர பட்டர் அனுபவித்த கண்ணனை நாமும் அநுபவிக்கலாம்.